திருப்பூர்

பச்சாபாளையத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்பு

18th Aug 2022 11:22 PM

ADVERTISEMENT

 

பல்லடம் நகராட்சி 8 ஆவது வாா்டு பச்சாபாளையத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா்.

பல்லடம் நகராட்சி 8 ஆவது வாா்டு பச்சாபாளையம் பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

மேலும் முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT