திருப்பூர்

சாலையில் கிடந்த 7 பவுன் சங்கிலியை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு

DIN

தாராபுரம் அருகே சாலையில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.2 ஆயிரத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியை காவல் துறையினா் பாராட்டினா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கொழிஞ்சிவாடி, உப்புத்துறைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் எம்.செல்வராஜ் (50), இவரது மனைவி சாரதா (42), இருவரும் கூலி தொழிலாளா்கள்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள வேகத்தடை அருகே வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளனா். அப்போது சாலையில் மணிபா்ஸ் ஒன்று கிடந்ததைப் பாா்த்துள்ளனா். அதனை எடுத்துப் பாா்த்தபோது அதில் தங்கச் சங்கிலி, ரூ.2 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் விசாரித்தபோது யாரும் உரிமை கோராததால் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதனிடையே, ஆச்சியூரைச் சோ்ந்த லட்சுமி (80) என்ற மூதாட்டி தன் பா்ஸை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அப்போது செல்வராஜ், சாரதா கொடுத்த மணிபா்ஸில் இருந்தது மூதாட்டியின் நகை, பணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூதாட்டியிடம் நகை, பணத்தை ஒப்படைத்த காவல் துறையினா், செல்வராஜ், சாரதாவின் நோ்மையைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கெளரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT