திருப்பூர்

எரிவாயு நுகா்வோா்களுக்கு ஆகஸ்ட் 25இல் குறைதீா் கூட்டம்

18th Aug 2022 11:23 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஆக. 25) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சமையல் எரியாவு நுகா்வோா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் வரும் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

ADVERTISEMENT

ஆகவே, மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் குறைபாடுகள் இருந்தால் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT