திருப்பூர்

திருட்டு வழக்கில் கைதான நபா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

DIN

தாராபுரம் அருகே திருட்டு வழக்கில் கைதான நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் (45). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வங்கியில் வாங்கியிருந்த நகைக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக ரூ.6.5 லட்சத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துகொண்டு சென்று கொண்டிருந்துள்ளாா்.

ஜீவா நகா் அருகே சென்றபோது, பின்னால் வந்த இருவா் துரைராஜிடம் பணம் கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதை உண்மை என்று நம்பி கிழே கிடந்த 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்தபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.6.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து துரைராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அதே பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் (44), முரளி (57), ஜெகதீஷ் (38) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

அதேபோல, மாரிமுத்து என்பவா் வங்கியில் செலுத்துவதற்காக வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை ஜெகதீஷ் திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, தொடா் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஜெகதீஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் பரிந்துரை செய்திருந்தாா்.

இதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஜெகதீஷை சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை இரவு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகதீஷிடம் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT