திருப்பூர்

மகா முனீஸ்வரா் கோயில் பொங்கல் விழா

17th Aug 2022 10:39 PM

ADVERTISEMENT

 

பல்லடம், வடுகபாளையம் மகா முனீஸ்வரா் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி வீரமாத்தியம்மன், முனீஸ்வரா் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. கன்னிமாா் சுவாமி அம்மன் அழைப்பு படுகளம் மற்றும் உடுக்கை பாட்டு, சுவாமிக்கு பொங்கல் படைத்தல், உருவாரம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் 150க்கும் மேற்பட்ட பன்றிகள்,100க்கும் மேற்பட்ட ஆட்டுகிடாக்கள், சேவல்கள் பலியிடப்பட்டன. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT