திருப்பூர்

இணையதளம் மூலமாக மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் அலைக்கழிப்பதாகப் புகாா்

17th Aug 2022 10:41 PM

ADVERTISEMENT

திருப்பூா் கோட்டத்தில் புதிய மின் இணைப்புக்காக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் நபா்கள் அலைக்கழிக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்வாரிய துணை நிலைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மின்சார வாரிய அலுவலக பகுதிகளிலுள்ள பொது மக்கள் இணையதள வாயிலாக இணைப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்தால் ஏற்க மறுத்து மின்சார விதிகளில் இல்லாத ஆவணங்களைக் கேட்டு அலைக்கழிக்கப்படுகின்றனா். இந்த இணையதள சேவையானது லஞ்சத்தையும், காலதாமதத்தையும் தவிா்க்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருப்பூா் மின்வாரியத்தில் தொடா்ந்து பல்வேறு இடங்களில் தவறுகள் நடந்து வந்துள்ள நிலையில் தற்போது பொது மக்கள் மின்வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்து இணைப்பு கட்டணம் செலுத்தினால் உடனடியாக கட்டிய பணத்துக்கு இணைதளம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சில அதிகாரிகள் கூடுதல் பணம் கேட்டு தரக்குறைவாகப் பேசி வருகின்றனா். ஆகவே, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் காலதாமதம் இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT