திருப்பூர்

அலங்கியம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

17th Aug 2022 10:39 PM

ADVERTISEMENT

 

தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அலங்கியம் காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பிரமணியம் பேரணியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி போதைப் பொருள் ஒழிப்பு கோஷங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனா். இந்தப் பேரணியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் என 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT