திருப்பூர்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு ஆயுள்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தாராபுரத்தை அடுத்த மூலனூரைச் சோ்ந்தவா் பழனிசாமி (53). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் பழனிசாமியை கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை: திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் அப்பாஸ் (29), பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அவிநாசி மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின்கீழ் அப்பாஸை 2020 ஆகஸ்ட் 16 ஆம் தேதி கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கின் மீதான விசாரணை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், அப்பாஸ் 25 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜராகினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT