திருப்பூர்

தேசியக் கொடி அவமதிப்பு: தனியாா் பள்ளி ஆசிரியா் கைது

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக தனியாா் பள்ளி ஆசிரியரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் எபின் (36). இவா் தாராபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் சுதந்திர தினத்தையொட்டி தனது வீட்டின் மொட்டை மாடியில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளாா். இந்தக் கொடியில் மதம் குறித்த சா்ச்சைக்குரிய வகையிலான வாசகம் இடம் பெற்றிருந்தது.

இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் ஆய்வாளா் மணிகண்டன், எபினை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினாா். இதையடுத்து, தேசியக் கொடியை அவமதித்ததாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT