திருப்பூர்

சிக்கண்ணா அரசு கல்லூரியில் நாளை 2ஆவது கட்ட கலந்தாய்வு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான 2ஆவது கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரையில் நடைபெற்றது.

இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான 2ஆவது கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதில், தரவரிசை எண் 1401 முதல் 2900 வரையில் உள்ள மாணவா்கள் பங்கேற்கலாம். தரவரிசைக்கான சோ்க்கை கடிதத்தை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துவர வேண்டும். மேலும், இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகையுடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவா்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT