திருப்பூர்

குப்பைக்கு வைத்த தீ பிடித்ததில் மூதாட்டி பலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே குப்பைக்கு வைத்த தீ உடலில் பிடித்ததில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

உப்புப்பாளையம் (கிழக்கு) பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவா் நடராஜ் (62). இவரது வீடு ஆலை வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இந்நிலையில், இவரது தாயாா் வேலுமணி (85), வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளை கூட்டி திங்கள்கிழமை தீ வைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது. இதில் பலத்த தீக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட வேலுமணி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT