திருப்பூர்

வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும்:காங்கயம் நகராட்சி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT