திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ. 54 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி, லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, கரூா், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 145 விவசாயிகள் தங்களுடைய 1,376 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 69 டன்.

ஈரோடு, வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், காங்கயம், முத்தூரைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

விலை கிலோ ரூ. 68.20 முதல் ரூ. 85.20 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 80.45. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 80.90. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 54 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT