திருப்பூர்

கேஎம்சி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

16th Aug 2022 12:37 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா, 14 ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம், பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பள்ளி முதல்வா் ஜி.ஆா்.ரமேஷ், பள்ளி அறங்காவலா்கள் அந்தோனிசாமி, சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

ஓய்வுபெற்ற முன்னாள் திருப்பூா் மாநகர காவல் ஆணைரும், தமிழக காவல் துறை வடக்கு மண்டலத் தலைவருமான பி.நாகராஜன் ஐபிஎஸ், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் துணைத் தலைவா் எம்.வேலுசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றிவைத்து பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து யோகா, சிலம்பம், தற்காப்பு கலைகள், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT