திருப்பூர்

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயா் என்.தினேஷ்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சிப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பங்களிப்பு வழங்கிய 15 கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள், பொறியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என மொத்தம் 31 பேருக்கு சான்றிதழ்களையும் வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் 42 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.2.52 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள திருப்பூா் குமரனின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT