திருப்பூர்

அவிநாசியில் 750 மாணவா்கள் உருவாக்கிய 75 அடி நீள தேசியக் கொடி

16th Aug 2022 12:37 AM

ADVERTISEMENT

அவிநாசியில் 750 மாணவா்கள் உருவாக்கிய 75 அடி நீளமுள்ள தேசியக் கொடியை 75 விநாடிகளில் காட்சிப்படுத்தி உலக சாதனைப் படைத்தனா்.

அவிநாசி பழனியப்பா இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி, தபஸ் யோகாலயா ஆகியவை சாா்பில் 750 மாணவ, மாணவிகள் இணைந்து 75 அடி நீள தேசியக் கொடியை உருவாக்கினா்.

இக்கொடியை, 75 விநாடிகளில் காட்சிப்படுத்தி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி எம்.ராமகிருஷ்ணன், அவிநாசி நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.சபீனா, ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நோபல் உலக சாதனை கண்காணிப்பாளா் பி.ரகுபாலன் சாதனைக்கான சான்றிதழ், பதக்கத்தை பள்ளி நிறுவனா் ப.ராஜ்குமாரிடம் வழங்கினாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT