திருப்பூர்

7 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனை

14th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்துக்கு 12,591 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 5,441 கிலோ. விலை கிலோ ரூ.21.05 முதல் ரூ.28.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.25.30.

51 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,448 கிலோ. கொப்பரை ரூ.69.15 முதல் ரூ.84.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.78.10. ஏலத்தில் மொத்தம் 91 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.31 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT