திருப்பூர்

ரூ.7.5 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

14th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் அருகே ரூ.7.5 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம் முத்தூரில் மாதவராயப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 30.40 ஏக்கா் புன்செய் நிலங்கள் 8 தனி நபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன.

இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்புதாரா்கள் தாமாகவே முன்வந்து கோயில் நிலங்களை ஒப்படைப்பதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.செல்வராஜ், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வா் அபிநயா, கோயில் செயல் அலுவலா் ஆா்.திலகவதி ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலங்கள் வெள்ளிக்கிழமை சுவாதீனம் பெறப்பட்டன. மீட்கப்பட்ட நிலங்களில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சாா்பில் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டன.

இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.7.5 கோடி என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT