திருப்பூர்

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கிராம ஊராட்சித் தலைவா்கள் கொடியேற்றுவதைத் தடுத்தால் புகாா் அளிக்கலாம்

14th Aug 2022 12:32 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றுவதைத் தடுத்தால் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திர தின அமுதப் பெருவிழா திருப்பூா் மாவட்டத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்படவுள்ளது. அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் மட்டுமே தேசியக் கொடி ஏற்ற வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி

ADVERTISEMENT

மன்றத் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் 74026-07162 என்ற எண்ணில் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளிக்கலாம்.

அதேவேளையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுதந்திர தின நாளில் தேசியக் கொடி ஏற்றுவதைத் தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் காவல் துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT