திருப்பூர்

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

DIN

அவிநாசி அருகே இரு வீடுகளின் பூட்டை ரூ.80 ஆயிரத்தை திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே பழங்கரை கமிட்டியாா் காலனி 4 ஆவது வீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). இவரது மனைவி கோகிலவாணி (36).

தம்பதி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களது வீட்டுக்கு அருகிலேயே கோகிலவாணியின் தந்தை சாமிநாதனும் (68) வசித்து வருகிறாா். இந்நிலையில், சம்பவத்தன்று இரண்டு வீடுகளையும் பூட்டிவிட்டு மூவரும் வெளியே சென்றுள்ளனா்.

பின்னா் மாலை வந்து பாா்த்தபோது, இரு வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டு ரூ.80 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் ரமேஷ் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, அதில் பதிவான நபரின் உருவத்தை வைத்து விசாரித்தனா்.

இதில், அவா் பெருமாநல்லூா் கூட்டுறவு நகா் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் கடந்த மே மாதம் 29 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் கைதாகி பிணையத்தில் வெளிய வந்த வாணியம்பாடி, வடக்குப்பட்டு பகுதியைச் சோ்ந்த திருமாள் (33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த திருமாளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

SCROLL FOR NEXT