திருப்பூர்

700 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

13th Aug 2022 01:28 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகே அவிநாசிபாளையம் பகுதியில் 700 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள ஆண்டிபாளையம், வாய்க்கால்மேடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப் படை உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ராஜா, அழகுராஜா, சேதுமாதவன் ஆகியோா் சம்பவ இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட முருகேசன் (42), சுரேஷ்குமாா் (44) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 700 கிலோ புகையிலைப் பொருள்கள், காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT