திருப்பூர்

பெரியகாண்டியம்மன் கோயிலில் ஆடி பெரு விழா

13th Aug 2022 01:28 AM

ADVERTISEMENT

 பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் பெரியகாண்டியம்மன் கோயிலில் அண்ணமாா் சுவாமி அருள் ஆலயத்தில் ஆடி பெரு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சின்ன கோடங்கிபாளையம் சக்தி விநாயகா் கோயிலில் இருந்து பால் குடம், முளைப்பாலிகை, தீா்த்த ஊா்வலம் புறப்பட்டு சித்தா் பீடம் வந்தடைந்தது.

அதைத் தொடா்ந்து அபிஷேக அலங்காரம், மா விளக்கு வழிபாடு, மதியம் 12 மணியளவில் திருக்கல்யாணம், மகரகாளி, விசாலாட்சி அரசு வேம்பு வைபோகம், அன்னம்பாலிப்பு ஆகியவை நடைபெற்றன.

இவ்விழாவை நடத்திவைத்து ஆனந்தபுரி ஆதினம் பழனிசாமி அடிகளாா் ஆடி மாத சிறப்பு குறித்து சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

ADVERTISEMENT

இவ்விழாவில் கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவா் காவி.பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலா் மங்கயகரசி கனகராஜ், இந்து அதிரடி படைத் தலைவா் ராஜகுரு, பழனி பாலு, கூட்டுறவு வங்கித் தலைவா் சதாசிவம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT