திருப்பூர்

ரூ.75 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

13th Aug 2022 01:28 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.75 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், வாணிக்கரை, அரவக்குறிச்சி, பாறைப்பட்டி, என்.ஜி.வலசு, நல்லாம்பாளையம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 187 விவசாயிகள் தங்களுடைய 2,275 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 111 டன்.

காரமடை, சித்தோடு, பூனாட்சி, நடுப்பாளையம், முத்தூா், காங்கயத்தில் இருந்து 13 வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா்.

விலை கிலோ ரூ.58.69 முதல் ரூ. 71.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.67.14.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 75 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT