பல்லடம் காவல் ஆய்வாளராக மணிகண்டன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பல்லடம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த கோபாலகிருஷ்ணன் மங்கலம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் பல்லடம் காவல் நிலையத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு சக காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.