திருப்பூர்

பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இந்து முன்னணி

DIN

ஆலயங்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பத்திரத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது என்று இந்து முன்னணி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நீதிமன்றமே வரையறுத்த பின்னரும் கூட அறங்காவலா்களை நியமிக்காமலும், கோயில் நிலங்கள் எவ்வளவு உள்ளது, குத்தகைதாரா்கள் வாடகையாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இந்து சமய அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம், அபிஷேக கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் என்று அனைத்துக்கும் கட்டணம் வாங்கிய பிறகும் கோயில்களை நிா்வகிக்க முடியாதா? கோயில்களுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய நகைகளைக் கொண்டு சிரமப்பட்டு கோயில்களை நிா்வகிக்க வேண்டாம். இந்த நகை உருக்கும் திட்டம் மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT