திருப்பூர்

75வது சுதந்திர தின விழா: அவிநாசியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

11th Aug 2022 10:45 PM

ADVERTISEMENT

 

நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அவிநாசி சமூக அமைப்பினா் சாா்பில் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளைத் தலைவா் ரவிக்குமாா் கூறியதாவது:

75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பல்வேறு சமூக அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி நிா்வாகத்தினா், தனியாா் நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். அதன்படி, அவிநாசி பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் இலக்கு நிா்ணயம் செய்து, அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை அனைத்துத் தரப்பினரும் பெற்று இயற்கை வளம் காக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். அவிநாசி சாந்தி வித்யாலயா, சேவூா் கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவா்களுக்கு வழக்குரைஞரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை மரக்கன்றுகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT