திருப்பூர்

வீடுவீடாகச் சென்று தேசியக் கொடி ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவா்கள்

10th Aug 2022 10:18 PM

ADVERTISEMENT

 

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வீடு வீடாகச் சென்று தேசியக் கொடியை ஏற்ற விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 மாணவா்கள் சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் வீடு, அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக திருப்பூா் இந்திரா நகா் பகுதியில் வீடுவீடாகச் சென்று வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக புதன்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT