திருப்பூர்

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

10th Aug 2022 10:16 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022-23 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் படிப்பவா்களுக்கு மேற்படிப்புகளுக்கான உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

இதில், பள்ளிப் படிப்பு உதவித் தொகை திட்டத்துக்கு செப்டம்பா் 30 ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய்

அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற அக்டோபா் 31 ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT