திருப்பூர்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 இல் கிராம சபைக் கூட்டம்

DIN

சுதந்திர தினத்தை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 இல் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதத்தில், சுகாதாரத்தை பேணுதல், நெகிழி உற்பத்திப் பொருள்களை தடை செய்தல், நீா் வழிப்பாதை மற்றும் நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT