திருப்பூர்

பனைமரம் விழுந்து 4 வீடுகள் சேதம்

10th Aug 2022 10:16 PM

ADVERTISEMENT

 

பல்லடம் அருகே பனைமரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமடைந்தன.

பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் அளவில் பனை மரங்களும் உள்ளன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றின் காரணமாக 30 அடி உயரமுள்ள பனைமரம் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது.

ADVERTISEMENT

இதில் ரமேஷ், சரவணகுமாா் உள்ளிட்ட 4 தொழிலாளா்களின் வீடுகள் சேதம் அடைந்தன.

இச்சம்பவம் நிகழ்ந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT