திருப்பூர்

உடுமலையில் சுதந்திர தின விழா பேரணி

10th Aug 2022 12:06 AM

ADVERTISEMENT

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒட்டி பேரணி மற்றும் போதைப் பொருள் மறுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு காவல் துறை, அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை, உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் மறுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஆா்.தேன்மொழிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். காவல் ஆய்வாளா்கள் ராஜேஷ்கண்ணா, சுஜாதா, உடுமலை தொழில் வா்த்தக சபை தலைவா் ஆா்.அருண் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதன் பின்னா் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி பேரணி நடைபெற்றது.

அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய பேரணியை டிஎஸ்பி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இந்த பேரணி, கல்லூரி சாலை, தளி சாலை, பொள்ளாச்சி சாலை, புறவழிச்சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதைப் பொருள் மறுப்பு விழிப்புணா்வு, சுதந்திர தின விழா வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை நிா்வாகி ஆடிட்டா் ஆா்.கந்தசாமி உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT