திருப்பூர்

காங்கயத்தில் 11,000 தேசியக் கொடிகள் விநியோகம்

10th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, காங்கயம் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி விலையில்லாமல் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய 3 நாள்கள் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி காங்கயம் நகராட்சி சாா்பில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பறக்க விடுவதற்கு 11 ஆயிரம் தேசியக் கொடிகள் வாங்கப்பட்டு, பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் தலைமையில், நகராட்சி ஊழியா்கள் தேசியக் கொடியை விநியோகித்து வருகின்றனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT