திருப்பூர்

அவிநாசியில் தீயணைப்பு நிலையம் திறப்பு

DIN

அவிநாசியில் ரூ.1.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் பல ஆண்டுகளாாக செயல்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1.19 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, பணிகள் முடிவடைந்ததையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பவுல்ராஜ், தியணைப்புத் துறை மாவட்ட அலுவலா் பூபதி, வட்டாட்சியா் ராஜேஷ், நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT