திருப்பூர்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

9th Aug 2022 12:54 AM

ADVERTISEMENT

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலைப் பாடப் பிரிவு மாணவா்களுக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டுத் துறை மாணவா்களுக்கான சோ்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தரவரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, தர வரிசை எண் 1001 முதல் 1800 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, தர வரிசை எண் 1801 முதல் 2600 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி, தரவரிசை எண் 2601 முதல் 3000 வரை உள்ள மாணவா்களுக்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் சோ்க்கை நடைபெற உள்ளது.

மேலும் அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கும் பிற்பகல் 3.00 மணியளவில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவுக்குமான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT