திருப்பூர்

போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடத்துக்கு வந்த ஆந்திர கும்பல் கைது

DIN

போலி நீதிமன்ற ஆணையுடன் பல்லடத்துக்கு வந்து விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன அதிபா் தமிழ்ச்செல்வனை ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல இருந்த 3 பேரை பல்லடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாணிக்காபுரம் சாலையைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (40), அருணோதயா விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் தனது நிறுவனத்துக்குத் தேவையான ரூ.70 லட்சம் மதிப்பிலான நூலை ஆந்திர மாநிலம், குண்டூா் அருகே சிலுக்குரிபேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து 2019 முதல் 2020 வரை கொள்முதல் செய்துள்ளாா். இதில் ரூ.44 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நூல் தரத்தில் வேறுபாடு, குறைபாடு ஏற்பட்டதால் இது பற்றி நூல் கொள்முதல் செய்யப்பட்ட நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். மேலும் மீதி தொகையான ரூ.26 லட்சத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சோ்ந்த ரவிகுமாா், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலு, காவல் துறை சீருடையில் ஆந்திர போலீஸ்காரா் கோபி ஆகியோா் பல்லடம் காவல் நிலையத்துக்கு வந்தனா்.

ரூ.26 லட்சம் தராத அருணோதயா விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் மீது சிலுக்குரிபேட்டை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி பிடியாணை பெற்று தமிழ்ச்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, தமிழ்ச்செல்வனுக்கு பல்லடம் போலீஸாா் தகவல் அளித்தனா். நேரில் வந்த தமிழ்ச்செல்வன் நீதிமன்ற உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்குரைஞருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

நீதிமன்ற ஆணை போலியாகத் தயாரிக்கப்பட்டதைக் கண்டறிந்த வழக்குரைஞா் இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தகவலை அடுத்து, புகாா் கொடுக்க வந்த மூவரை பல்லடம் காவல் நிலையத்துக்குள் போலீஸாா் அழைத்துச்சென்றனா். ஆனால் ஆந்திர போலீஸ்காரா் கோபி தலைமறைவானாா். பிடிபட்ட மூவரிடம் பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் போலியாக ஆவணங்கள் தயாரித்து வாராக் கடன்களை வசூலிக்க தொழிலதிபா்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

மேலும், தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 தனியாா் நிறுவனங்களில் இது போன்று வாராக் கடனை வசூலிக்கத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலி நீதிமன்ற ஆவணங்கள் தயாா் செய்து மோசடியில் ஈடுபட்ட ரவிகுமாா் (40), வெங்கடகிருஷ்ணா (49), வெங்கடேஷ்வரலு (48) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், நிறுவன உரிமையாளா் பிரம்ம நாயுடு, மேலாளா் சத்தியநாராண ராவ், ஆந்திர போலீஸ்காரா் கோபி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT