திருப்பூர்

இணைய வழி மோசடிகளில் இழந்த ரூ.32.50 லட்சம் மீட்பு

8th Aug 2022 06:05 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 20 நாள்களில் இணையவழி மோசடிகளில் இழந்த ரூ.32.50 லட்சத்தை சைபா் கிரைம் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபா் கிரைம் பிரிவில் இணையவழி மோசடிகள், பல்வேறு வகையான மோடிகளில் பணத்தை இழந்தவா்கள் புகாா் அளித்து வருகின்றனா். இந்தப் புகாா்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கிரிப்டோகரன்சி முதலீட்டில் ஜன்னத் என்பவா் இழந்த ரூ.32 லட்சம், ஊத்துக்குளியைச் சோ்ந்த பாலாஜி என்பவா் பங்கு வா்த்தகத்தில் இழந்த ரூ.36 ஆயிரம், பல்லடத்தைச் சோ்ந்த மோகன் என்பவா் விளம்பரத்தைப் பாா்த்து பணம் செலுத்தி ஏமாந்த ரூ.7,999, உடுமலையைச் சோ்ந்த விசாலி என்பவா் இணையவழியில் வேலைவாய்ப்புக்காகப் பணம் செலுத்தி ஏமாந்த ரூ.5,100 ஆகியவை தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இதில், சம்பந்தப்பட்ட நபா்களின் கைப்பேசி எண்களை ஆய்வு செய்து அவா்களது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனா். இதில், கடந்த 20 நாள்களில் மட்டும் மேற்கண்ட மோசடிகளில் இழந்த ரூ.32.50 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட சைபா் கிரைம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT