திருப்பூர்

வட்டமலை அணை வாய்க்காலில் தீ விபத்து

8th Aug 2022 01:46 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் அருகே வட்டமலை அணை வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

வட்டமலை அணையிலிருந்து பாசனத்துக்காக வலது, இடது என இரண்டு வாய்க்கால்கள் உள்ளன. இதில் செந்தலையாம்பாளையம் அருகே காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து வேகமாக அடித்த காற்றினால் நாலாபுறமும் தீப் பரவியது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி தலைமையிலான வீரா்கள் தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா்.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யாரோ புகை பிடித்துவிட்டு வீசிச் சென்ால் தீப்பிடித்துள்ளதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT