திருப்பூர்

ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சடலம் 3 நாள்களுக்குப் பின்னா் மீட்பு

8th Aug 2022 01:46 AM

ADVERTISEMENT

 

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கிய இளைஞரின் சடலம் 3 நாள்களுக்குப் பின்னா் மீட்கப்பட்டது.

தாராபுரம் வட்டம், மூலனூரைச் சோ்ந்தவா் எஸ்.தினேஷ்குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா் தனது தம்பி கவின்குமாா், நண்பா் அமீருடன் தாராபுரம் அமராவதி ஆற்றில் கடந்த வியாழக்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ்குமாா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவருடன் குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேடியும் அவரது சடலத்தை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், அமராவதி பழைய பாலத்தின் அருகில் ஒருவரது சடலம் மிதந்து வருவதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை சனிக்கிழமை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT