திருப்பூர்

வெள்ளக்கோவிலில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

8th Aug 2022 01:46 AM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா் புதுப்பை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது தங்கமேட்டில் ஒரு தனியாா் நூல் மில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளியை விசாரித்தபோது, அவா் ஒடிஸா மாநிலம், சன்பரி தாலுகாவைச் சோ்ந்த தசரத் மாலிக் (30) என்பதும், கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு, 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT