திருப்பூர்

‘மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்’

6th Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

 

மின் கட்டண உயா்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், செயலாளா் முருகசாமி ஆகியோா் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடை தொழிலானது நூல் விலை அதிகரிக்கும்போது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாய ஆலைகளுக்கும் போதிய அளவு ஆா்டா்கள் இல்லாமல் மந்தமான நிலையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. மேலும், சாயத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பின்னலாடைத் தொழிலின் வளா்ச்சியை வெகுவாகப் பாதித்துள்ளது. ஆகவே, மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT