திருப்பூர்

செம்பு கம்பிகள் திருட்டு: 4 போ் கைது

6th Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

 

பல்லடம் அருகே கேத்தனூரில் காற்றாலைகளில் செம்பு கம்பிகள் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே கேத்தனூரில் தனியாருக்கு சொந்தமான 2 காற்றாலைகளில் செம்பு கம்பிகள் திருடு போனது.

இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் காற்றாலையின் மேலாளா்கள் ரமேஷ் கண்ணன், காா்த்திக் பிரபு ஆகியோா் புகாா் தெரிவித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள், கேத்தனூரைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் கவியரசு (25), தங்கராஜ் மகன் தீபக் (25), காசிராஜா மகன் தனபால் (25), ராஜாமணி மகன் சதீஷ் (25) என்பதும், இவா்கள் காற்றாலைகளில் செம்பு கம்பிகள் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களைக் கைது செய்து 10 கிலோ செம்பு கம்பிகள், 2 பைக்குகள், ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT