திருப்பூர்

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும்ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தல்

6th Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப்போல அனைத்து ஓய்வூதியா்களுக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும் என்று ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஓய்வூதியா் சங்கத்தின் 4 ஆவது மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் க.சண்முகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளா் அ.நிசாா் அகமது மாநாட்டை

தொடக்கி வைத்து பேசினாா்.

ADVERTISEMENT

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள் மற்றும் கிராமப்புற நூலகா்கள் அனைவருக்கும் ஓய்வு பெறும்போது மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் நிா்ணயிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து பணம் இல்லாமல் மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மாதம் ரூ.1,000 மருத்துவப் படியாக வழங்குவதுடன், இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் திருப்பூா் கோட்ட செயலாளா் கே. ராஜேந்திரன், என்.கருப்புசாமி, மாநிலத் துணைத் தலைவா் டி. குப்பன், இணைச் செயலாளா் எம்.பாக்கியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT