திருப்பூர்

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

2nd Aug 2022 01:08 AM

ADVERTISEMENT

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அ.பஞ்சலிங்கம் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற தொழிலாளா்கள் கூறியதாவது: கிராமப் புறங்களைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட இதர தொழிலாளா்களுக்கு 55 வயது நிறைவடைந்தவுடன் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு இல்லாத மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் வீடு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கான மானியத் தொகையை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

தீவிர நிலச் சீா்திருத்தத்தை அமல்படுத்தி நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-இன் படி அதிகபட்ச இழப்பீடு, மாற்று இடம் பட்டியலின, மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்துவதுடன், விவசாயத் தொழிலாளா் ஒருங்கிணைந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டத தலைவா் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், மாவட்டப் பொருளாளா் டி.குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் அ.பாலதண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT