திருப்பூர்

மதுபானக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

2nd Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

திருப்பூா் கே.வி.ஆா்.நகரில் குடியிருப்புப் பகுதியில் செயல்படும் மதுபானக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 42 ஆவது வாா்டுக்குள்பட்ட கே.வி.ஆா்.நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையைச் சுற்றிலும் அதிக அளவிலான குடியிருப்புப் பகுதிகள் உள்ளதால் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் டாஸ்மாக் நிா்வாகத்திடம் ஏற்கெனவே பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மனுக்களின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாநகராட்சி 42 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அன்பகம் திருப்பதி தலைமையில் கடை முன்பாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மத்திய காவல் துறையினா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ADVERTISEMENT

இதில், மதுபானக் கடையை இடமாற்றம் செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் பேரில் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT