திருப்பூர்

கல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தல்

2nd Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

பல்லடம் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் வழக்குரைஞா் ஈசன், பல்லடம் வட்டாட்சியா் நந்தகோபாலிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம், பூமலூா், 63 வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கல் குவாரிகள், ஜல்லி உற்பத்தி நிலையங்கள், எம். சாண்ட் உற்பத்தி நிலையங்கள், தாா் கலவை தொழிற்சாலைகள் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், இந்த ஆலைகள், தொழிற்சாலைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டமீறல்களைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து முறைகேடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT