தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் உடுமலையில் கட்டப்பட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
உடுமலை கொழுமம் சாலையில் சிஎன்ஆா் மாா்க்கெட்டில் உள்ள தற்காலிக கட்டத்தில் ஐடிஐ செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் உடுமலை அரசு கலைக் கல்லூரி எதிரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்தபடி முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன், திமுக நிா்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, 108 பயனாளிகளுக்கு ரூ.33.24 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.