வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.80 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,330 விவசாயிகள் தங்களுடைய 9,880 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,205 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
பருத்தி விலை குவிண்டால் ரூ.11,850 முதல் ரூ.13,358 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.12,350.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.80 கோடி.
ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.