திருப்பூர்

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

30th Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

பல்லடம் நகா்மன்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். ஆணையா் விநாயகம், துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கவுன்சிலா்களின் விவாதம் வருமாறு:

ராஜசேகரன் (திமுக): எனது வாா்டில் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேங்கும் குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக பணியாளா்கள் நியமனம் செய்திட வேண்டும்.

ADVERTISEMENT

செளந்தரராஜன் (திமுக): நகரில் தினசரி சேகரிக்கப்படும் 10 டன் குப்பையை கொட்டுவதற்கு போதுமான இடமில்லை. நிரந்தரமான குப்பை கிடங்கு அமைக்க அரசிடம் இடம் கேட்டு பெற வேண்டும்.

ஈஸ்வரமூா்த்தி (காங்கிரஸ்): பல்லடத்தில் முன்பு இருந்த இடத்தில் காமராஜா் சிலை நிறுவ காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும். பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை. சக்தி நகரில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும்.

விஜயலட்சுமி (திமுக): ராம் நகா் பகுதியில் ஒடை தூா் வாராமல் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட நச்சு பிராணிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.

தேவையில்லாத பொது குடிநீா் குழாய்களை அகற்ற வேண்டும்.

தண்டபாணி (சுயே): நகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ருக்குமணி (திமுக): 16வது வாா்டு வளா்ச்சி திட்டப் பணிகளில் புறக்கணிக்கப்படுகிறது. குடிநீா்ப் பற்றாக்குறை உள்ளது.

கவிதாமணி (தலைவா்): நகராட்சியில் 18 வாா்டுகளுக்கும் பாகுபாடு இன்றி ஒரே மாதிரியாகதான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எந்த வாா்டையும் புறக்கணிக்கவில்லை. பல்லடம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்கூட்டத்தில் 49 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT