திருப்பூர்

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை

30th Apr 2022 01:04 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்ஷய திருதியைப் பண்டிகை மே 3 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆங்காங்கே குழந்தைத் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

ஆகவே, திருப்பூா் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், அனைத்து மகளிா் காவல் நிலையம், சைல்டு லைன், இந்து சமய அறநிலையத் துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக விரிவாக்க நல அலுவலா், மகளிா் ஊா் நல அலுவலா் ஆகியோா்களைக் கொண்டு குழந்தைத் திருமணங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதே வேளையில், மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT