திருப்பூர்

அரசு திட்டங்கள் பெற அடிப்படை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முகாம்

30th Apr 2022 11:13 PM

ADVERTISEMENT

 

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களை பெறுவதற்கு தேவையான அடிப்படை சான்றிதழ்கள் இல்லாததால், தகுதி இருந்தும் விண்ணப்பித்து பயன்பெற முடியாமல் உள்ள மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி, துணைத் தலைவா் சுரேஷ், செயலாளா் கோமதி, வாா்டு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், சமூக வாழ்வதார கல்விக்கான மேம்பாட்டு மையம், ஸ்மைல்ஸ் இயக்குநா் குருசாமி, பொறுப்பாளா் கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் ராமநாதபுரம் ஊராட்சியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT